பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் உயர்த்தப்படவுள்ளன!
நீதவான்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதல் கட்டமாக பிரதம நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டவர்களுக்கு இவ்வாறு சம்பளம் உயர்த்தப்பட உள்ளது.
எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2020ம் ஆண்டு வரையில் ஐந்து கட்டங்களாக சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளது.
அத்துடன் இது தொடர்பிலான யோசனை ஒன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளார்.
நீதவான்களுக்கான சம்பளங்கள் உயர்த்தப்பட்டதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள் உயர்த்தப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சபாநாயகர் கருஜயசூரியவும் பிரதமரும் சம்பளங்களை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Comments
Post a Comment