அமைச்சர் ரிசாதுக்கு எதிரான முகநூலை இயக்கி வந்த நபர் சிக்கினார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கடந்த பல வருடங்களாக குறிவைத்து தாக்கியும் அவரது பணிகளை கொச்சைப்படுத்தியும் அவர் மீது இல்லாத பொல்லாத கதைகளை பரப்பி வீண் பழி சுமத்திய ஒரு கூட்டத்தின் தலைவன் தனது ஊத்தை எழுத்துக்கள் வாயிலாக இற்றை வரை காலமும் இவ்வாறு அமைச்சர் ரிஷாட் மீது சேறு பூசியது தானே என்பதை வெளிப்படுத்திவிட்டார்.
முசலி பிரதேச மக்களுக்கு அமைச்சர் ரிஷாட் செய்த பணிகளை சகித்துக் கொள்ள முடியாத அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட இந்த சக்திகள், அமைச்சரும் அவரின் கட்சியான மக்கள் காங்கிரஸும் வடமாகாணத்திலும் வன்னியிலும் குறிப்பாக முசலி பிரதேசத்திலும் பெற்று வரும் செல்வாக்கை தாங்கிக்கொள்ள முடியாது இல்லாத பொல்லாத கதைகளை பரப்பி வருகின்றனர்.
அமைச்சர் ரிஷாட்டின் பணிகளில் ஊழலிருப்பதாகக் காட்டுவதும், அவர் ஊழல் புரிந்து பணம் சம்பாதிப்பதாக ஒரு பிரம்மையை ஏற்படுத்துவதும் இவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது. இதன் மூலம் முசலிப் பிரதேசத்தில் அரசியலில் நடு நிலையாக இருப்பவர்களை எதிர்க்கச் செய்வதும் அமைச்சர் ரிஷாட்டுடன் நடுநிலையாக இருப்பவர்கள் அவருடன் சார்ந்து விடக்கூடாது என்பதுவுமே இவர்களின் திட்டமாகும். அப்பாவி மக்களின் மனதை மாற்றிவிட முடியுமென இவர்கள் கங்கணம் கட்டியிருக்கின்றனர்.
அமைச்சர் ரிஷாட் மேற்கொள்ளும் பணிகளை தூஷிப்பதும் அவர் கொண்டுவர திட்டமிட்டுள்ள பணிகளை வேறு எவராவது கொண்டு வருகின்றென கூறி மக்கள் மத்தியில் அமைச்சரை ஒரு கையாலாகதவர் எனக்காட்டுவதும் இவர்களின் இன்னொரு நோக்கமாகும்.
16 வருடங்களாக புற்றுக்குள் இருக்கும் பாம்பு போல மறைந்திருந்து, ஒளிந்திருந்து, அமைச்சர் ரிஷாட்டை கொத்தித் திரிந்த இவர்களின் தலைவன், தான் எடுத்த முயற்சிகளெல்லாம் தோல்வி கண்ட நிலையில் தற்போது ஒரு வார காலமாக வெளிவரத்தொடங்கி தனது உண்மையான சுயரூபத்தை காட்டிவிட்டான்.
’மக்கள் நண்பன்’ என்ற பெயரில் முகநூலைத் தொடங்கி, மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் மீது பல்வேறு அபாண்டங்களை பரப்பி வந்த இந்த ஊத்தை எழுத்தாளர் இஸ்லாமிய எழுச்சிக்குரலான ‘(மீள்……….)’ என்னும் சஞ்சிகையில் பணியாற்றுவது தான் வேதனையானது.
முஸ்லிம் ஒருவனுக்கு மாற்றமான முறையில் பொய்களை உண்மையாக எழுதும், இஸ்லாமிய பண்புக்கு மாற்றமாக இயங்கும் இவர், பத்திரிகைத் தொழிலுக்கு லாயக்கற்றவர். இறைவனுக்குப் பயமில்லாமல் மனச்சாட்சிக்கு விரோதமாக நச்சுக்கருத்துக்களை அமைச்சருக்கெதிராக இவர் தொடர்ந்தும் விதைக்கின்றார்.
முசலிப் பிரதேசத்தில் அண்மையில் வெள்ளிமலையிலும் அளக்கட்டுவிலும் அமைச்சர் கலந்து கொண்ட கூட்டங்களில் முசலியில் படித்த சிலர் தன்னைப்பற்றியும் தனது அபிவிருத்திகள் தொடர்பிலும் விஷமப் பிரச்சாரங்களை விடுத்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டுமென்றும் முசலி மக்களாகிய நீங்கள் தனக்கு வழங்கும் ஒத்துழைப்பு போன்று இங்குள்ள படித்தவர்களும் வழங்கினால் சிறப்பானதாயிருக்குமென கூறினார். அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் யாரையும் சைத்தான்கள் என்று கூறவில்லை.
அமைச்சரின் உரையை திரிபுபடுத்தி வேண்டுமென்று இட்டுக்கட்டப்பட்ட விடயங்களை (……………………….) என்பவர் பரப்பியுள்ளார். அல்லாஹ்வுக்கு சிறிதளவேனும் பயமில்லாமல் இவ்வாறான அபாண்டங்களை பரப்பிய இவருக்கு இறைவன் தான் வழிகாட்ட வேண்டும்.
நாலாம் கட்டையிலிருந்து மறிச்சுக்கட்டி வரை காடாகக் கிடந்த இடங்களை வீடுகள், கட்டிடமாக்கியும் எதிர்கால சந்ததிக்கு பயனளிக்கக் கூடிய வகையில் அளக்கட்டு எனும் புதிய கிராமத்தை உருவாக்கியும் பழைய கிராமங்களை புனரமைத்தும் மக்களை மீள்குடியேற்றியும் நல்ல பணிகளை மேற்கொள்ளும் அமைச்சர் மீது என்னதான் அபாண்டங்கள் பரப்பினாலும் முசலி மக்கள் அவருடனேயே இருக்கின்றனர் என்பதை காலம் பதில் சொல்லும்.

Comments
Post a Comment