தற்கொலை செய்துகொண்டவர் தொடர்பாக தீவிர விசாரணை!

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை தானே கொலை செய்ததாக தெரிவித்து இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் பல்வேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த புலனாய்வு பிரிவு தற்கொலை செய்துக்கொண்டபோது அவரின் காற்சட்டை பையிலிருந்து எடுக்கப்பட்ட கடிதம் வேறு யாராவது எழுதி வைத்ததா அல்லது யாருடையதேனும் அழுத்தம் காரணமாக அதனை அவர் எழுதியுள்ளாரா என்ற கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

Comments