ஆசிரியர்களின் நியமனம்: மத்தியரசு தலையிடுவதை அனுமதிக்க முடியாது – லாகிர்

laahir
மாகாண சபையின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் படி ஆசிரியர் நியமனத்தின் இடம், பங்கீடுகள் தொடர்பாக மாகாண சபைகளுக்கு உரித்துடைய அதிகாரங்கள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் மத்திய அரசாங்கம் இதில் தலையிடுவதானது மாகாண சபைகளின் அதிகாரங்களை கொச்சைப்படுத்துகின்ற செயலாக பார்க்க வேண்டியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாகிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் 64 வது அமர்வு நேற்று (06) இடம் பெற்றது.இதன் போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை வெளி மாகாணங்களுக்கு நியமித்தமை தொடர்பிலான விவாதம் சபையில் இடம் பெற்ற போது இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்று பேசப்பட்டு வருகின்ற இச் சூழ் நிலையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்களின் நியமனத்தில் மத்திய அரசாங்கம் தலையிட்டு வெளி மாகாணங்களுக்கு இவ் ஆசிரியர்களை நியமித்தமையானது துன்பியலான விடயமாக பார்க்க வேண்டியுள்ளது.இதில் மத்திய அரசானது மோசமான நிலையை காட்டியிருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற இச் சூழலில் வெளி மாகாணங்களுக்கு இப் புதிய ஆசிரியர்களை நியமிக்கின்ற செயலானது கிழக்கு மாகாணம் கல்வி ரீதியாக முன்னேறுகின்ற நிலையை தடுக்கும் நிலையாக பார்க்க வேண்டியுள்ளதோடு இது கல்வித் துறைக்கு செய்கின்றாக வேட்டாகும்.
எனவே இது விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சோடு இணைந்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வெளி மாகாணங்களுக்கு புதிதாக நியமனம் பெற்ற கல்வியல் கல்லூரி ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்க ஆவண செய்ய வேண்டுமெனவும் இல்லா விட்டால் தான் வெளி மாகாணங்களில் நியமனம் பெற்ற ஆசிரியர்களோடு இணைந்து எதிர்ப்பினை வெளியிடுவேன் எனவும் தெரிவித்தார்.a

தோப்பூர் நிருபர் முஹம்மட் புஹாரி

Comments