குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கொள்ளை!

கொழும்பு குடிவரவு குடியகல்வு திணைக்கள தலைமை அலுவலகத்தில் பெண்ணொருவரிடம் 75 ஆயிரம் ரூபா பணத்தை ஒருவர் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்ணொருவர் குறித்த திணைக்களத்தில் தமக்கான சேவையொன்றை பெற்றுக்கொள்ள வந்துள்ளார். இதன்போது அவர் தமது சேவையை பெற்றுக்கொள்ளும் வகையிலான விண்ணப்பப்படிவம் ஒன்றை எழுதிக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது அலுவலக உத்தியோகத்தர் போல இருந்த நபரொருவர் குறித்த பெண்ணின் தோள் பையில் இருந்த பணத்தை களவாடிக்கொண்டு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் கூச்சலிட்டபோது, பொலிஸார் குறித்த நபரை கைது செய்ய அவனை துரத்தி சென்றுள்ளனர்.

இருந்தபோதும் குறித்த நபர் வாகன நெரிசலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments