ஆவா குழு வேட்டைக்காக அதிகாரிகளின் விடுமுறை ரத்து!

வட பகுதியில் நடைப்பெற்று வரும் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் மூன்று விஷேட காவல்படையை பொலிஸ் மாஅதிபர் ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த பொலிஸ் தனிப்படைகள்  சமூகவிரோத செயல்களுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பொலிஸ் தினைக்களம் தெரிவிக்கின்றது.

பொலிசாருக்கு கிடைத்த தகவல்களின்படி கோப்பாய் மானிப்பாய் சுன்னாகம் பகுதியில் இந்த குழுவினர் நடமாற்றம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாகவே பொலிஸ் அதிகாரிகளின் சகல விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Comments