எமது ஆட்சியில் எம்முடன் இருந்தவர்கள் எமக்கே எதிராகி விட்டனர்!

மஹிந்த ராஜபக்ச முறையாக வளர்த்திருந்தால் இந்த நிலை  ஏற்பட்டிருக்காது. அவரின் வளர்ப்பு சரியில்லையென பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ச அலுவலகத்தில் சமகால அரசியல் சூழல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்துகையிலேயே பசில் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
திருடனின் தாயிடம் திருட்டு குறித்து குறி பார்ப்பது போன்றதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் மோசடிகள் தொடர்பான விசாரணைகளும்  எமது ஆட்சிக்காலத்தில் எம்முடன் கூட இருந்தவர்கள் இதற்கு உடந்தையாக தற்போது செயற்படுகின்றனர்.
மஹிந்த ராஜபக்ச ஒழுங்காக  இவர்களை வளர்த்திருந்தால் இந்த நிலை இன்று ஏற்பட்டிருக்காது  மஹிந்த ராஜபக்சவிற்கு செய்த துரோகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இவர்கள் செய்யமாட்டார்கள் எனக் கூற இயலாது.

Comments