யாழ். மாணவர்களை நானே சுட்டுக்கொன்றதாக கூறியிருப்பார்கள்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தனது ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்திருந்தால், தானே அவர்களை சுட்டுக்கொன்றதாக கூறியிருப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வாகன விபத்து தொடர்பாக கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள தமது ஆட்சிக்கால பிரதியமைச்சரான சரத் குமார வீரரட்னவை நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்ட மஹிந்த, அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நாட்டின் அரசியல் சூழ்நிலைக்கேற்ப சகல விடயங்களும் மாறி வருவதைப் போன்று தற்போது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, ஜனாதிபதி கூறியதைப்போன்று நாட்டில் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் விசாரணை ஆணைக்குழுக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்  காரணமாகவே ஏற்கனவே விடுவிக்கப்பட்ட தமது ஆட்சிக்கால பிரதியமைச்சரை மீண்டும் கைதுசெய்துள்ளதாக மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.


Comments