அவதானம் – பதுளை நகர் முழுவதும் புகை மூட்டம்!

பதுளையில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் பரவிய தீயினால் நகர் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக மிதென் வாயு வெளியேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை மாநகர சபை ஆணையாளர் விஜேசிறி ரன்தெனிய இதனை தெரிவித்துள்ளார்.

புகை மூட்டம் அதிகரித்துள்ளதால் முகத்தை மூடி அவதானமாக இருக்குமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படட்டுள்ளது.

Comments