சேதமாக்கப்பட்ட நாணய தாள்களை தவிர்க்கவும்!
வேண்டுமென்றே சேதங்கள் ஏற்படுத்தப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட நாணய தாள்களை பெற்றுக்கொள்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு அறிவித்துள்ளது.
அவ்வாறு அந்த தாள்களை வைத்திருப்பவர்கள் அந்த பெறுமதியை இழக்க நேரிடுமென மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறாக சேதமாக்கப்பட்ட நாணய தாள்களுக்காக மத்தியவங்கி எந்த பெறுமதியையும் வழங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மற்றையவரிடமிருந்து நாணய தாள்களை பெற்றுக்கொள்ளும் போது இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


Comments
Post a Comment