பல்டி அடிக்கும் கூட்டு ஒப்பந்த சங்கங்கள்… பாவம் தொழிலாளர்கள்!

தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்காவிட்டால் தீ குளிக்க போவதாக கூறிய பெட்ரோல் வடிவேல் மற்றும் அமைச்சர் பதவிக்காக ஏங்கிய இ.தொ.காவும் இப்பொழுது தோட்ட தொழிலாளிகளை காட்டி கொடுத்து 110 ரூபாய் சம்பள உயர்வுடன் தோட்ட தொழிலாளர்களின்  போராட்டத்தை  முடிவிற்கு கொண்டுவந்துவிட்டது.

தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தை பலவீனமாக்கி மாற்றுவதற்காக கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடாத அமைச்சர் திகாம்பரத்தின் பெயரை விற்று தங்களுக்கான அமைச்சு பொருப்புக்களை வரவு செலவு திட்டம் பாராளும்றத்தில் சமர்பிக்கும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தப்பின் இந்த கூட்டு ஒப்பந்த கூட்டாளிகளுக்கு ஒரு அமைச்சரவை அமைச்சும் இரண்டு பிரதி அமைச்சும் எதிர்பார்த்து மக்களை முதலாளிமார்களுக்கு விலை பேசிவிட்டதாக தொழிலாளர்கள்  கருத்து தெரிவிக்கின்றார்கள்.

இக்கருத்து உண்மையாகுமா என்பதை சகல மக்களும் வெகுவிரைவில் அறியலாம்.

Comments