யாழ் பொலிஸ் அதிகாரிகளின்  தீய செயல்களால் இடமாற்றம்!

கதிர்காமத்திலுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் இருவரும் முறைகேடாக நடந்து கொண்டமையை  சிங்கள நாள் வெளியிட்டதன் மூலம் இரு அதிகாரிகளுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

கடந்த வாரம் தமது விடுமுறையை முன்னிட்டு யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் இருவரும் கதிர்காமம் சென்று பொலிஸ் அதிகாரிகளுக்கான ஓய்வுவிடுதியில் மதுபானத்துடனும் இளம் பெண்களுடனும் இருந்தமையே இந்த இடமாற்றத்திற்கான காரணம்.

இதன்படி  உப பொலிஸ் அதிகாரி  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கும் , யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மட்டக்களப்பிற்கும்  இடமாற்றம் பெற்றுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments