நல்லதொரு சமூகத்தை உறுவாக்குவதற்கான பிரதான சவால் போதை பொருள்!

போதைப் பொருள் அழிவிலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாவல நாரஹன்பிட்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாம் அனைவருக்கும் போதைப் பொருள் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய சமூகப் பிரச்சினைகளிலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாத்து நல்லதொரு சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு உண்டு.

போதைப் பொருள் வர்த்தகர்கள் ஆட்சி அமைக்கவும், ஆட்சி கவிழ்க்கவும் கூடிய வலிமை பெற்றுக்கொண்டுள்ளனர். ஆன்மீக சமூகமொன்றை கட்டியெழுப்ப அனைத்து மதங்களுக்கும் ஆற்றல் உண்டு.

நல்லதொரு சமூகத்தை கட்டியெழுப்ப காணப்படும் பிரதான சவால் போதைப் பொருளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments