கிளிநொச்சியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபரை கைது செய்துள்ள பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸார் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டத்தையடுத்து பெரும் பதற்றம் ஏற்ப்பட்டிருந்த நிலையில் அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தபட்டு காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸாரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் தர்மபுரம் கட்டைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிஸார் இணைந்து இன்று பிற்பகல் கட்டைக்கடுப் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.


Comments
Post a Comment