வவுனியாவில் பதட்டம் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!

வவுனியா, பூந்தோட்டம் மற்றும் மாதீனா நகர் பகுதியில் இளைஞர்களிடையே ஏற்பட்ட முருகல் நிலையின் காரணமா பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தினமான நேற்று மாலை பூந்தோட்டம் பகுதியில் மது போதையில் கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த போது மதீனா நகர் பள்ளிவாசல் அருகாமையில் குறித்த முச்சக்கர வண்டி தடம்புரண்டது.

முஸ்லிம் இளைஞர்கள் விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவியிருந்தனர்.

இதன்போது ஏற்பட்ட முரன்பாட்டினால் ஆட்டோவில் பயணித்த இளைஞர்கள் பூந்தோட்டம் சந்திக்கு சென்று மீண்டும் மதீனா நகர் வந்து அப்பகுதி முஸ்லிம் இளைஞர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டது.

இச்சம்பவத்தில் இரு தமிழ் இளைஞர்களும், ஒரு முஸ்லிம் இளைஞரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்தே  மேலும் அசம்பாதிகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மதீனா நகர் பள்ளி வாசல் மற்றும் பூந்தோட்டம் சந்திப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments