ஜனா­தி­ப­திக்கு ஊழல்­வா­திகளை பாது­காக்கும் எண்ணம்  இல்லை!

ஊழல் செய்­த­வர்­களை காப்­பாற்­று­வ­தற்கு ஜனா­தி­பதி முயற்­சிக்­க­வில்லை என அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

இரா­ணுவ அதி­கா­ரி­களை விசா­ரிக்­கும்­போது அவர்­களை ஏள­னப்­ப­டுத்­த­ வேண்டாம் என்றும் பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் தனக்கு அறி­விக்­கு­மா­றுமே ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

எனவே ஜனா­தி­ப­தியின் முழு­மை­யான பேச்சை கேட்­காமல் விமர்­சிக்க முனை­வது சரி­யா­னது அல்ல .

மேலும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் சரி­யான முறையில் செயற்­ப­ட­வேண்டும் என்­பதே ஜனா­தி­ப­தியின் நிலைப்­பா­டாகும்.

ஆனால் ஒரு சிலர் இந்த விட­யத்தை பயன்படுத்தி அர­சியல் சுய­லாபம் அடைய முயற்­சிக்­கின்­றனர் என்றும் சுட்­டிக்­காட்­டினார்.  இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு உள்­ளிட்ட சில நிறு­வ­னங்கள் தொடர்பில் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் சர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள நிலைமை தொடர்­பா­கவே அமைச்சர் சம­ர­சிங்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சில தினங்­க­ளுக்கு முன்னர் நிகழ்த்­திய உரையை சில ஊட­கங்கள் முழு­மை­யாக வெளியி­ட ­வில்லை. ஒரு­சில விட­யங்­களை மட்டும் வெளி­யிட்­ட­மை­யினால் சிலர் விமர்­சிக்­கின்­றனர்.

ஆனால் உண்­மையில் ஊழல் செய்­த­வர்­களை காப்­பாற்­று­வ­தற்கு ஜனா­தி­பதி முயற்­சிக்­க­வில்லை. திரு­டி­ய­வர்­களை பாது­காக்கும் நோக்கம் ஜனா­தி­ப­திக்கு இல்லை.   மாறாக இரா­ணுவ அதி­கா­ரி­களை விசா­ரிக்­கும்­போது அவர்­களை ஏள­னப்­ப­டுத்­த ­வேண்டாம் என்றும் பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் தனக்கு அறி­விக்­கு­மா­றுமே ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் அவ­ருக்கு இந்த விட­யங்கள் அறி­விக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  எனவே ஜனா­தி­ப­தியின் பேச்சை முழு­மை­யாக கேட்­காமல் விமர்­சிக்க முனை­வது சரி­யா­னது அல்ல. சில ஊட­கங்கள் ஜனா­தி­ப­தியின் பேச்சை சரி­யாக வெளி­யி­ட­வில்லை.

எனவே விமர்­சனம் செய்ய முயற்சிப்பவர்கள் முதலில் ஜனாதிபதி யின் உரையை முழுமையாக வெளியிட வேண்டும்.  சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற் படவேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments