தெற்கில் உள்ளவர்களும் மற்றவர்களும் விசனப்படுகின்றார்கள் – சி.வி.விக்னேஸ்வரன்
வடமாகாண சபையும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இன்று குறை நிவர்த்தி நடமாடும் சேவையை முன்னெடுத்திருந்தன.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
இதுவரை காலமும் மக்கள் தங்களின் மனோநிலையை, அபிலாஷைகளை வெளியே சொல்ல முடியாத நிலையிருந்தது. அவ்வாறான ஒரு கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது மக்கள் தங்களின் தேவைகளை, அபிலாஷைகளை, எதிர்பார்ப்புக்களை கூறியதன் விளைவாக தற்பொழுது தெற்கிலே என்னை விமர்சனப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இதுவரை காலமும் மக்களை சிந்தித்து செயற்பட விடவில்லை எங்களுடைய சூழல். எங்களுடைய மனக்கிளேசங்களை நாங்கள் வெளிப்படுத்தும் போது, இதுவரை காலமும் வாயை மூடி மௌனிகளாக இருந்தவர்கள் இப்படியெல்லாம் கூறுகின்றார்களே என்று தெற்கில் உள்ளவர்களும் மற்றவர்களும் விசனப்படுகின்றார்கள்.
என்றார்.
இதேவேளை, கிளிநொச்சி பொதுச்சந்தையில் தீ அனர்த்தத்தினால் எரிந்த கடைகளை, புதிதாக நிர்மாணிப்பதற்கான அடிக்கல் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று நாட்டப்பட்டது.

Comments
Post a Comment