கிளியால் அம்பலமான கணவனின் கள்ளதொடர்பு!
குவைத் நாட்டின் ஹவாலி பகுதியில் வசித்துவரும் ஒரு செல்வந்தர் தனது மனைவி வீட்டில் இல்லாதபோது, வீட்டுவேலை செய்யும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார்.
அவரது மனைவிக்கு இதுதொடர்பாக சில மாதங்களாக சந்தேகம் வலுத்துவந்த நிலையில், வேலைக்காரியுடன் அவர் பேசும் ‘காதல் மொழிகளை’ அச்சுஅசலாக அந்த வீட்டின் வளர்ப்புக் கிளி பேச ஆரம்பித்ததால், இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது கணவர் தன்னை ஏமாற்றி, நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர போலீசார் ஆலோசித்துவரும் நிலையில் இவ்வழக்கில் ஆதாரத்துடன் நிரூபிப்பதற்கு தேவையான போதிய சாட்சிகள் இல்லை என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.


Comments
Post a Comment