கிண்ணியா பொலிஸ் தலைமையில் நடமாடும் சேவை

இலங்கை பொலிஸ் சேவையின்150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிண்ணியா பொலிஸ் தலைமையில் நடமாடும் சேவை நேற்று(30) ஈச்சந் தீவு கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகர் கட்டிடத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எம்.பி.B விஜய சிரி தலைமையின் கீழ் காலை09.00 மணியளவில் மத அனுஷ்டானங்களுடன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் பொலிஸ் சேவைகளாக பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதி வழங்கல் சிரம தான நிகழ்வு கலை கலாசார நிகழ்ச்சிகள் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு பைசல் நகர் ஆலங்கேணி வீதி அமைத்தல் போன்ற சேவைகள் தொடர்ச்சியாக ஒரு மாத கால திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும் இதில் பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஆர்.எம்.நிமல்பெரேரா கிண்ணியா தள வைத்தியசாலை அதிகாரி டாக்டர் ஏ.எச்.எம்.சமீம் காதி நீதவான் பைத்துள்ளா பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர்கள் உட்பட அக்கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.

Comments