அரசு நெருக்கடிக்குள்ளாகுமா?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய உரையால், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களும் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி நேற்று தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது ஆணைக்குழுவின் தலைவர் டி.பி.வீரசூரிய உட்பட அதன் ஆணையாளர்கள் அனைவரும் ஒருமித்து இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் பதவி விலகும் பட்சத்தில் அது அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்துமென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Comments
Post a Comment