பொலிஸ் அட்டகாசம் தொடர்பில் அறிவிக்க அதிரடியான புதிய இலக்கம்!

பொது மக்களின் நலன் கருதி இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளின் நடத்தை தொடர்பில் அறிவிக்கவே இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் செயலாளர் என். ஆரியதாச பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

பொலிஸ் அட்டகாசம் தொடர்பில் அறிவிப்பதற்கான புதிய இலக்கம் கீழ் வருமாறு,

24 மணிநேரம் இயங்கும் 071 -0361010 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிய தருமாறு தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் செயலாளர் என். ஆரியதாச பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்களுக்கு பொலிஸ் அதிகாரிகளால் ஏற்படும் பிரச்சினை குறித்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப சூழலில் இருக்கும் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்தில் முன் வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை 8 மாகாணங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள அலுவலகங்களில் இந்த முறைபாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் செயலாளர் என். ஆரியதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Comments