தடை உத்தரவுக்குள்ளான சீ.எஸ்.என் ஒளிபரப்பு அனுமதி பத்திரம்!

ஒளிபரப்பு சட்டங்களை மீறிய குற்றத்திற்காக சீ.எஸ்.என் (கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க்ஸ்) ஒளிபரப்புச் சேவையை தடைசெய்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சு  தகவல் வெளியிட்டுள்ளது.

திகதி குறித்த  நிறுவனம்  2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் 142163 என்ற இலக்கத்தின் கீழ், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான யோசித்த ராஜபக்சவிற்கு சொந்தமான சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் இயங்கிய காணியையும், கட்டடத்தையும் நகர அபிவிருத்தி அதிகார சபை கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி கையகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments