மூதூர் ஜின்னா நகர் கிராமத்தில் வீட்டுத் தோட்ட உள்ளீடுகள் வழங்கி வைப்பு



l99
தேசிய கமத்தொழில் வாரத்தை முன்னிட்டு மூதூர் கமநல சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் வீட்டுத் தோட்ட மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் மூதூர் ஜின்னா நகர் கிராமத்தில் வீட்டுத் தோட்ட பயிர்கள் செய்யும் விவசாயிகளுக்கு நேற்று (10) வீட்டுத் தோட்டத்திற்கான உள்ளீடுகள் வழங்கப்பட்டது.அத்தோடு வீட்டுத் தோட்டம் செய்யும் முறை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் கலந்து கொண்டதோடு கௌரவ அதீதிகளாக திருகோணமலை மாவட்ட கமநல சேவை உதவி ஆணையாளர் பீ.கே.சிராஜ்,மூதூர் கமநல சேவை உத்தியோகத்தர் எம்.சாபி மற்றும் மூதூர் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Comments