குழப்பமடைந்த பாடசாலை அதிபர் நஞ்சருந்தி தற்கொலை





விசாரணைகளுக்காக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் வீட்டுக்கு வந்ததால் குழப்பமடைந்த, பாடசாலை அதிபர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



நேற்று பிற்பகல் 02.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்த அதிபர் கொஸ்வத்தை - போதலேகம பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.



இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவரது மனைவி நாத்தான்டிய பகுதி பாடசாலை ஒன்றில் சேவையாற்றுகிறார்.



அப் பகுதியைச் சேர்ந்த பலர் குறித்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள நிலையில், இது குறித்து விசாரிக்க சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.



இதனையடுத்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த அதிபர் திடீரென அங்கிருந்து வீட்டுக்கு பின்னால் சென்று நஞ்சருந்தியுள்ளார்.



பின்னர் அவரை உடனடியாக மாரவில ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், சிகிச்சை பலனளிக்காது அவர் உயிரிழந்துள்ளார்.



சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொஸ்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments