மூன்று பேர் அதிரடி கைது!

செவணகல – திவுல்மண்டிய பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை விசேட அதிரடிப்பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு உளவு இயந்திரங்கள் , புவியியல் ஆய்வு உபகரணங்கள் மற்றும் சுரங்க பணியகத்தினால் வௌியிடப்பட்ட உரிமமொன்றின் பிரதி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

Comments