வெட்டுக் காயங்களுக்கு இலக்காகி இருவர் பலி!

அங்குனுகொலபெலஸ்ஸ, முரவசிஹேன பகுதியில் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு 8.00 மணியளவில் வெட்டுக் காயங்களுடன் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனுமே (25 வயது) இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தாயும், மற்றுமொரு மகனும் தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்துக்கான காரணம் இதுவரை அறியப்படாதுள்ளதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments