இரு மாணவர்களின் மரணம் தொடர்பில்நி யாயமான முறையில் விசாரணைகளை நடத்தவும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக இரு மாணவர்களின் மரணம் தொடர்பில் நியாயமான முறையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

பொல்லனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உந்துளிருயில் பயணித்து கொண்டிருந்த 2 மாணவர்கள், மதிலொன்றில் மோதியபோது, பலியானதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் சம்பவத்தின் போது துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்தநிலையில், பிரேத பரிசோதனையின் போது உந்துளிருயை செலுத்திய மாணவரின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படும் 5 காவற்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</

Comments