மந்திரவாதியா? ; வீதியில் பெண்ணை நிர்வாணப்படுத்தி சித்திரவதை
இந்தியாவில் ஒடிஷா மாநிலத்தில் புவனேஸ்வரில் கிராம மக்கள் ஒன்றிணைந்து இளம் பெண்ணொருவரை வீதியில் வைத்து நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் புவனேஸ்வர் அருகே தேராபதர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தின் முன்னர் அந்த பகுதியில் உள்ள சிறுமி ஒருவருக்கு காலிசி தேவதை ஆட்கொண்டதாக அக்கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து குறித்த சிறுமி அந்த கிராமத்தில் உள்ள பக்தர்களின் கோரிக்கைகளுக்கு பதில் கூறி வந்துள்ளார். திடீரென்று, அந்த கிராமத்தில் ஒரு பெண்மணி மத்திரவாதம் செய்து வருவதாகவும், இதனால் கிராமத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதுமட்டுமின்றி அவரது அருகாமையில் இருந்த ஒரு மரத்தில் இருந்து சில இலைகளை பறித்துக் கொண்டு அவர் குறிப்பிட்ட அந்த பெண்ணின் வீடு நோக்கி நடக்க துவங்கியுள்ளார்.
அந்த சிறுமியை தொடர்ந்து ஒட்டு மொத்த கிராமமும் பிந்தொடர்ந்துள்ளது. குறித்த சிறுமி ஒரு வீட்டின் முன்பு வந்து நின்று, அந்த வீட்டின் பெண்மணியை வீட்டுக்கு வெளியே வரச் செய்து, அவர்தான் மந்திரவாதி எனவும், அவரால் பல உயிர்கள் அக்கிராமத்தில் பறிபோனதாகவும் குறிப்பிட்டார்.
சிறுமி கூறுவதை அருள்வாக்கு என கருதியிருந்த மக்கள், ஆத்திரத்தில் குறிப்பிட்ட இளம் பெண்ணை அவரது தலை முடியில் பிடித்து பிரதான வீதியின் நடுவே இழுத்து வந்து, கூடியிருந்த அத்தனை நபர்களும் அவரை தாக்கத் துவங்கியுள்ளனர். வலியால் துடித்த அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அத்துடன் விட்டுவிடாது குறித்த பெண்ணின் ஆடைகளை களைந்து அந்த பொதுமக்கள் கூட்டத்தின் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் மயக்கமடைந்த குறித்த இளம் பெண்ணை வீதியோரத்தில் அப்படியே விட்டுவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனிடையே கிராம தலைவர் ஒருவர் இதுகுறித்து கேள்வியுற்று, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இணைந்து பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிந்த பொலிஸார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment