நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் சீனாவுக்கு விஜயம் செய்துள்ளனர். நாடாளுமன்ற உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே இவர்கள் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஆளும் கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக, ஸ்ரீலங்கா சுதந்திரக் சட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இவ்விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர். சீனா அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் இவ்விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் டோடேம் (Jorn rohdem) யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இவர் நேற்று மாலை 05.00 மணியளவில் யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு சென்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே விக்னேஸ்வரன்,
வட மாகாணத்தில் ஜேர்மன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள், மீள்குடியேற்றங்கள், சுகாதார, கல்வி, வீடமைப்புத் திட்டங்கள், சமூக மேன்பாட்டு திட்டங்கள் தொடர்பாக ஜேர்மன் தூதுவர் என்னிடம் கேட்றிந்து கொண்டார்.
மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபையின் உறவுகள் தான்தோன்றித்தனமாக காணப்படுகின்றது எனவும் இதனால் எங்களால் செய்யப்படுகின்ற பல செயற்பாடுகளுக்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றது எனவும், தான் இச் சந்தர்ப்பத்தில், ஜேர்மன் தூதுவரிடம் சுட்டிக்காட்டியதாகவும், வடக்கு முதல்வர் மேலும் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment