ஷிரந்தியை காப்பாற்றும் மஹிந்த ரணில் ஒப்பந்தம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்தவுக்கும்  இடையிலான இரசிய இணைப்பு காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படவில்லை  என  மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது  இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று காணப்படுவதாக சிலர் குற்றம் சுமத்துகின்ற போதிலும் உண்மையிலேயே அவ்வாறான இணைப்பு ஒன்று பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலேயே உள்ளதாகவும்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட முன்னாள் ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக காணப்படுகின்ற விசாரணைகளை மூடி மறைக்கப்படுவது  “மஹிந்த ரணில் ரகசிய ஒப்பந்தத்தின்” ஒரு பகுதி என அவர் குறிப்பிட்டடுள்ளார்.

Comments