சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை!
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்து கிருலப்பனை பேர குளத்தில் வீசிய நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கிருலப்பனை சித்தார்த்த வீதியைச் சேர்ந்த குறித்த ஆறு வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொன்ற பிரதான சந்தேகநபரான போலே என அழைக்கப்படும் ரவிந்திரன் சுரேந்திரன் (23) என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவினால் இன்று (25.10.2016) குறித்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து குற்றங்களும் எவ்வித சந்தேகங்களும் இன்றி நிரூபணமாவதால், பிரதிவாதியே குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதோடு, அவருக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதவான் அறிவித்தார்.
அத்துடன் குறித்த வழக்குத் தொடர்பில் சட்ட மாஅதிபரினால் இதற்கு முன்னர் பெயரிடப்பட்ட ஏனைய இரு சந்தேகநபர்களையும் நிரபராதி என விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் அறிவித்தார்.

Comments
Post a Comment