இந்து சமுத்திர கேந்திர நிலையமாக திருக்கோணமலை!

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்று நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது பற்றிய கலந்துரையாட எதிர்வரும் சனிக்கிழமை தான் பிரேசிலுக்க விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாகவும்  இன்று நடைப்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்

மேலும், இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவது தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு எனவும்  குறிப்பிட்ட அவர், கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களையும், கட்டுநாயக்க, மத்தல விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக திருகோணமலை துறைமுகத்தை வங்கக் கடலின் கேந்திர நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க  மேலும் தெரிவித்துள்ளார்.

Comments