ஜனாதிபதியின் கருத்துக்கு கடும் அதிருப்தி!
ஜனாதிபதி அண்மையில் எப்.சி.ஐ.டி. தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு பிரஜைகள் சக்தி அமைப்பு தனது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
அவ்வமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பேராசிரியர் சரத் விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
எப்.சி.ஐ.டி. அதிகாரிகள் தனது மரணத்துக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், உயிரைக் கையில் வைத்துக் கொண்டுதான் சில விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன் பணிகள் சாதாரண ஒன்றல்ல.
இது எனது நாடு என கூறி சட்டத்தை மீறிச் செயற்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை அழைத்து அவரிடம் சாட்சிகளைப் பதிவு செய்யும் அளவுக்கு தைரியமாக செயற்பட்ட இதன் அதிகாரிகளை ஜனாதிபதி கௌரவப்படுத்திப் பாராட்டியிருக்க வேண்டும்.
மாறாக, கத்தியால் குத்துவது போன்று அவர்கள் எடுத்த முயற்சிகளுக்கு தனது அதிருப்தியை ஜனாதிபதி வெளிப்படுத்தியமைக்கு, சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகன் என்ற வகையில் எனது அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் பேராசிரியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Comments
Post a Comment