மாணவர்கள் உயிரிழந்த இடத்திலிருந்து துப்பாக்கி ரவை கூடு மீட்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சம்பவம் நடைபெற்ற குளப்பிட்டி பகுதியில் தடயவியல் பொலிஸார் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் போது துப்பாக்கி ரவை கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி விபத்து இடம்பெற்ற பகுதிக் கு சற்று தூரத்தில் கொக்குவில் சந்தைக்கு முன்பாகவுள்ள பகுதியில் இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ்.பொலிஸ் நிலைய தடயவிய ல் பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது துப்பாக்கி ரவை கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தொடர்ந்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments