“புதிய கூட்டணி” இவ்வாண்டு அறிவிக்கப்படாது!

கூட்டு எதிர்கட்சியினால் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணி இவ்வருடத்தில் அறிவிக்கப்படமாட்டாது என அதன் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போழுது குறித்த அரசியல் கூட்டணியின் உருவாக்க வேலைகள் முடிவுக்கு வந்துள்ளது.

இருந்தபோதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாண்டு டிசம்பர் வரை முன்னெடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் அவதானத்துடன் இருந்து, மேற்கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் நாட்களில், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுப்பாரா என்பது தொடர்பில் காத்திருப்பதாகவும், அவ்வாறு அழைப்பு விடுக்காமல் வெறும் நாடகம் மட்டுமே ஆடுவார் எனில், அதற்கு ஏற்றால்போல் பதிலளிப்பது தொடர்பிலும் கூட்டு எதிர்க்கட்சியினர் கலந்தாலோசித்துள்ளதாக தெரியவருகிறது.

அதற்கமைய 2017 ஜனவரி மாதம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை நாட்டு மக்களுக்கு முன்வைக்க கூட்டு எதிர்கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களிலிந்து தெரியவருகிறது.

Comments