இறக்காமம் மலை பகுதியில் ஒரு புத்தர் சிலை! மக்கள் மத்தியில் பரபரப்பு!

அம்பாறை இறக்காமம் மாணிக்கமடு பிரதேச செயலர் பிரிவக்குட்பட்ட பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மாணிக்கமடு பிரதேச மாயக்கல்லி மலையிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் எல்லைப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு இடம் பெற்று வரும் நிலையில் தமிழ் பிரதேசத்தில் நேற்றையதினம் திட்டமிட்ட முறையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறப்பினர்கள் இந்த விடயத்தில் கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments