நானுஓயாவில் கோர விபத்து: உண்மை காரணம் வெளியானது!

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாரன்டன் தோட்ட பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று மாலை 06.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரக்கறி தோட்டமொன்றுக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் நுவரெலியாவுக்கு திரும்பி சென்ற வேளை இவ்விபத்து இடம்பெற்றிருந்தன.

தற்போது விபத்திற்கான உண்மையாக காரணம் வெளியாகியுள்ளது.

குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதி அதிகமான குடிபோதையில் இருந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதிக வேகத்துடன் பயணித்துள்ள குறித்த டிப்பர் வாகனத்தை பிடிப்பதற்கு போக்குவரத்து பொலிஸார் முயற்சித்துள்ளனர். அத்துடன் வாகனத்தை துரத்தி பிடிக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதனை அவதானித்துள்ள டிப்பர் வாகனத்தின் சாரதி  மேலும் வேகமாக வாகத்தை ஓட்டியுள்ளார். இந்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த வாகனத்தின் சாரதிக்கு அனுமதி பத்திரம் இல்லை என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.




Comments