யாழில் பிரபாகரன்!

யாழ். மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பஸ் நிலையத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தேசிய அடையாளம் என்பன பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை காலை குறித்த பஸ் நிலையத்தின் உள்ளே “தேசிய தலைவர்” என்று பிரபாகரனின் உருவப்படமும் “தேசிய அடையாளங்கள்” என புலி மற்றும் செம்பகம் வாகை மரத்தின் படங்கள் அடங்கியதுடன், விடுதலைப்புலிகளின் எழுச்சி நாட்கள் குறித்த துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டுள்ளன.

இதை பார்த்த பொது மக்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த துண்டு பிரசுரங்களை யாரோ திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த செய்த சதியா என்பது தெரியாத போதும் போலிசாரும் இராணுவமும் இந்த சுவரொட்டிகளை அகற்றிவிட்டு சென்றனர்.

Comments