முஸ்லிம் மக்கள் புத்திகூர்மையுள்ளவர்கள்!
ஜெருசலேம் நகரில் அமைந்துள்ள புனித தலம் தொடர்பாக யுனெஸ்கோவில் பலஸ்தீன் கொண்டுவந்த பிரேரணை விவகாரத்தில் இலங்கை அரசாங்கமானது கொள்கையின் அடிப்படையிலேயே வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தது.
இஸ்ரேல் – பலஸ்தீன் நெருக்கடியானது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட சுயாதீன பலஸ்தீன் நாட்டை உருவாக்க வேண்டும். இந்த நெருக்கடிக்கு இரண்டு நாடுகள் என்ற அடிப்படையிலேயே இலங்கையின் ஆதரவு அமைந்திருக்கிறது .
ஒருசிலர் இன்று முஸ்லிம்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால் முஸ்லிம் மக்கள் புத்திசாலிகள். உண்மைக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை நன்கு புரிந்துகொள்பவர்கள்.


Comments
Post a Comment