யாழில் அமைதியை குழப்புபவர்கள் யார்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசணைக்கு அமைய தற்பொழுது விஜயத்தை மேற்கொண்டுள்ள மத்திய மாகாண ஆளுனர் நிலுக்கா ஏக்கநாயக்கா  குடாநாட்டின் தற்போதைய  நிலைமையை ஆராய்ந்துவருவதோடு முக்கிய உயரதிகாரிகளுடனும் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை நண்பகல்-12 மணி முதல் யாழ். ஊடகஅமையத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

யாழ். பல்கலைக் கழக மாணவர்களின் கொலைக்குப் பின்னரான நிலைமைகள்தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கமைய யாழ்.குடாநாட்டிற்கு வருகை தந்து இங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்ததாகத்தெரிவித்த  அவர் வடக்கில் உள்ள நிலைமைகளைக்குழப்புவதற்குப் பல்வேறு குழுக்களும், அமைப்புக்களும் முயன்று வருகின்றன எனவும் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,நான் கொலை செய்யப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு இன்னமும்  செல்லவில்லை. நாங்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள் என்ற வகையில் சட்டத்துக்குட்பட்டவகையில் தான் இந்த விடயத்தில் செயற்பட வேண்டும்.

வடக்கில் உள்ள  சகஜ நிலைமைகளைக் குழப்புவதற்குப் பல்வேறு குழுக்களும்,அமைப்புக்களும் முயன்று வருகின்றன.  அவற்றையெல்லாம் தாண்டி கடந்த-50வருடங்களுக்கும் மேலாக நாட்டில் வெற்றிகரமான ஆட்சி முறை நடைபெற்று வருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்தற்போது யாழ்ப்பாணத்தில் உருவாகியிருக்கிற நிலமையைச் சுமுகமான முறையிலும்,அமைதியான வழியிலேயே  தீர்த்து வைக்க வேண்டும் என்பதையே நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.

Comments