இளம்பெண் தலையை துண்டித்து நரபலி பூஜை!
மேற்கு வங்காள மாநிலம் புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ளது கோர்கில்லா கிராமம். இங்கு காந்தி செரா மன்னா என்பவருடைய பாக்கு தோட்டம் உள்ளது.
அங்குள்ள புதர் பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது உடல் நிர்வாண நிலையில் இருந்தது. துண்டிக்கப்பட்ட தலையை காணவில்லை. அவரது உடலை அந்த இடத்தில் வைத்து பூஜை செய்து இருந்தனர்.
எனவே, அவரை நரபலி கொடுத்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அவரது உடல் மற்றும் கால் பகுதிகளில் குங்குமம்- மஞ்சள் பூசப்பட்டு இருந்தது. மண் சட்டியில் அவரது ரத்தத்தை பிடித்து வைத்திருந்தனர். அதன் அருகில் வேப்பிலையை வைத்து இருந்தனர். சிவப்பு துணியால் அவரது உடலின் மேல் பகுதி மட்டும் போர்த்தப்பட்டு இருந்தது.
எனவே, இது நரபலி பூஜைதான் என கருதுகின்றனர். அந்த இளம்பெண் யார் என்பது இதுவரை தெரியவில்லை. வெளியூரில் இருந்து அந்த பெண்ணை இங்கு கடத்தி வந்து தலையை துண்டித்து நரபலி கொடுத்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
கொலை நடந்த பகுதியில் நரபலி கொடுக்கும் சம்பவங்கள் இதுவரை நடந்ததில்லை. இதுபோன்ற நரபலிகளை செய்யும் சாமியார்களும் அந்த பகுதியில் இல்லை.
பக்கத்து மாநிலமான ஒடிசா மற்றும் அசாமில் நரபலி சம்பவங்கள் ஏற்கனவே நடந்து இருக்கின்றன. எனவே, அங்கிருந்து சாமியார்களை அழைத்து வந்து இந்த நரபலியை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
ஒரு வேளை மர்ம நபர்கள் இளம் பெண்ணை கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்து விட்டு இதை மறைப்பதற்காக நரபலி நாடகம் ஆடி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம்பெண்ணின் உடல் மிட்னாபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. எஸ்.யூ.சி.ஐ. அமைப்பினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினார்கள்.

Comments
Post a Comment