இணக்கசபைக்கு கைமாறும் சுசந்திகா விவகாரம்!

இலங்கையின் முன்னாள் தடகள வீராங்கணை சுசந்திகா ஜயசிங்க அண்மையில்  அவரது கணவரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த வழக்கை இணக்க சபைக்கு மாற்றுமாறு கம்பஹா பிரதான நீதவான் காவிந்த நாணயக்கார  உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது  சுசந்திகா  ஜயசிங்க  மற்றும் அவரின் கணவரான தம்மிக நந்தகுமார ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments