தாஜுதீனின்  உடற்பாகங்களை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உத்தரவு

குற்றப்புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்ட றக்பி வீரர் வசீம் தாஜுதீனின்  26  உடற்பாகங்களை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை  கொழும்பு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

மாலபே பகுதியிலுள்ள தனியார் பல்கலைக்கழகமொன்றிலிருந்த குறித்த உடற்பாகங்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments