இராணுவ அதிகாரிகள் தான் ஊழல்வாதிகளா? கோத்தா கேள்வி

பாரிய அளவில் இராணுவ அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தப்படுவது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.

மேலும் பல இராணுவ அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள அவர், அரசியல் வாதிகளை விட இராணுவ அதிகாரிகள் ஊழல் புரிந்த வகையில் இந்த அரசாங்கம் நடந்து கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments