விரைவில் தினமும் ஆறு மணி நேர நீர் வெட்டு?

நாட்டில் நிலவி வரும் வரட்சி நிலை காரணமாக விரைவில் தினமும் ஆறு மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு வரும் நிலை பற்றி எச்சரித்துள்ளது நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை.

இது குறித்து அதன் தலைவர் அன்சான்சார் தகவல் வெளியிட்டுள்ளதுடன் நாட்டில் நிலவும் வரட்சி நிலை காரணம் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலை தொடருமாக இருந்தால் நீர் வெட்டு அவசியமாகும் அதேவேளை நீர் சேமிப்பு விவகாரத்தில் மக்களின் ஒத்துழைப்பு நாடப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments