பொருட்களை வாங்கவும் விற்கவும் ஃபேஸ்புக் சந்தை அறிமுகம்

பொருட்களை வாங்கவும் விற்கவும் ஃபேஸ்புக் சந்தை அறிமுகம்
 Oct 04, 2016  Bella Dalima  Business, Local  0

 
inShare

பயனர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் விற்கவும் கூடிய அம்சங்களை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவுள்ளது.

Marketplace என இதற்கு ஃபேஸ்புக் பெயரிட்டுள்ளது.

இலத்திரனியல் வர்த்தகம் அதிகரித்து வரும் நிலையில், சூழலுக்கு ஏற்றாற்போல் ஃபேஸ்புக் தனது தளத்தில் இத்தகைய மாற்றங்களை செய்து வருகிறது.

எதிர்வரும் சில தினங்களில் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகளில் 18 வயதிற்கு அதிகமான பயனர்கள் பயன்படுத்தும் வகையில் Marketplace அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வழக்கமான இலத்திரனியல் வர்த்தகத் தளங்களின் வடிவம் மற்றும் பயன்பாட்டைப் போலவே Marketplace உம் இருக்கும் எனத் தெரிகிறது.

எனவே ஒன்லைன் ஷொப்பிங்கில் அனுபவம் உள்ள பயனர்கள் இதை எளிதாகப் பயன்படுத்த முடியும்.

மேலும், பொருட்களை விற்கும் பயனர்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டும் தேவையான பொருட்களை வாங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

Comments