ஐ. நா.வின் அடுத்த பொதுச் செயலாளர் இவரா??

போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குட்டெர்ஸ் ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச் செயலாளராக தெரிவின் முதல்கட்ட வாக்கெடுப்பில் ஐ. நா. பாதுகாப்பு குழுவிலிலுள்ள ஐந்து நிரந்திர உறுப்பினர்களில் யாரும் அவரை எதிர்க்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நடைபெறவுள்ள ஐ. நா. பொதுச்சபைக் கூட்டத்தில் அவர் தெர்தெடுக்கபடுவது சம்பிரதாயமான ஒன்றாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குட்டெர்ஸ் ஐ.நா. தூதராக (அகதிகள்) 10 ஆண்டுகள் கடமையாற்றியவராவார்.

Comments