அக்கரைப்பற்று-ஆலிம் நகர் விபத்தில் பொத்துவில் கால்டீன் வபாத்!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலிம்நகர் பிரதான வீதியில் நேற்று (15.10.2016) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், பஸ் சில்லுக்குள் சிக்குண்டு இரு பிள்ளைகளின் தந்தையான எம்.ஐ.கால்டீன் என்பவர் சம்பவ இடத்திலேயே வபாத்தானார்.

(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஜ.கால்டீன் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இருந்து பொத்துவில் அறுகம்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸை குறித்த நபர் நிறுத்தி ஏற முயன்ற போதே தவறி விழுந்து பஸ் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.எம.சன்சீர்

Comments