முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கை!!

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம், 22ம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு நீர்சத்து இழப்பு, ஜுரம் என்றுதான் காரணம் கூறப்பட்டது.

எவ்வாறாயினும் முதல்வருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காவிரி தொடர்பாக டெல்லியில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் குழுவிற்கு, ஜெயலலிதாதான் அறிவுரைகள் வழங்கி அனுப்பியதாக கூறப்பட்டது.

ஆனால், நேற்று இரவு வெளியிட்ட 4 வது அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சுவாசத்தில் கோளாறு இருந்தால் செயற்கை சுவாசம் வழங்கப்படுவது வழக்கம். இதில் பதற்றப்பட எதுவுமில்லை. சளி தொல்லை அதிகமாக இருந்தால்கூட முகத்தில் மாஸ்க் வைத்து செயற்கை சுவாசம் வழங்கத்தான் செய்வார்கள்.

ஆனால் இவ்வாறு சிகிச்சை பெறும்போது படுக்கையில் அதிக நேரம் ஓய்வெடுக்க வேண்டிய நிலை வரும். இதுபோன்ற சூழ்நிலையில், யார் அரசு பொறுப்புகளையும், உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்சி பொறுப்புகளையும் கவனித்துக்கொள்கிறார்கள் என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Comments