சோனியா – மன்மோகன் சிங் – பிரதமர் சந்திப்பு!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிற்கான 3 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் இன்று காலை இவர்களை சந்தித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க டெல்லியில் இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவிராஜ், அமைச்சர் நிதின் கட்கரி, அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்து கலந்துரையாடியதுடன், இன்று மாலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்கவுள்ளார்.
இதனை தொடர்ந்து நாளை இந்தியப் பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதுடன் நாளை மாலையே பிரதமர் நாடு திரும்பவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment